மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி
வேடசந்தூர் அருகே மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியாகினார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு சிமெண்டு மேற்கூரை அமைக்கும் பணியில் திருச்சியை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர். மேற்கூரை அமைக்கும் பணிக்காக இரும்பு குழாயை அவர்கள் பொருத்தி கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால் மேற்கூரையில் இருந்து தொழிலாளர்கள் சிலர் தவறி கீழே விழுந்தனர். அதில், திருச்சி காமராஜ் நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 28), சதாம் (24), அம்பலகாரன்பட்டியை சேர்ந்த கிஷோர் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பார்த்திபன் பரிதாபமாக இறந்தார். சதாம், கிஷோர் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story