அமெரிக்காவில் இருந்து வந்த நாகர்கோவில் என்ஜினீயருக்கு கொரோனா
அமெரிக்காவில் இருந்து வந்த நாகர்கோவில் என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
அமெரிக்காவில் இருந்து வந்த
நாகர்கோவில் என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2½ மாதங்கள் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் முதன்முதலாக கொல்லத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு புதிய வகையான எக்ஸ்- இ வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் தொற்று மீண்டும் பரவாமல் இருக்க சுகாதார பணியாளர்களும், மருத்துவக்குழுக்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சுகாதார பணியாளர்கள் மூலம் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதை தொடா்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 10 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே என்ஜினீயர் வீடு முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
------
Related Tags :
Next Story