சின்ன வெங்காயம் ரூ5 க்கு கொள்முதல்


சின்ன வெங்காயம் ரூ5 க்கு கொள்முதல்
x
தினத்தந்தி 24 April 2022 11:29 PM IST (Updated: 24 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்னவெங்காயம் ரூ.5-க்கு கொள்முதல்
மடத்துக்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் விைல அதிகரித்து காணப்பட்டது. 
அப்போது ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த எதிர்பார்ப்பில் நல்ல விலை கிடைக்கும் என உத்தேசமாக ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தோம். 
பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவடை தொடங்கியது. அப்போது கூட ஒரு கிலோ ரூ.30 வரை விற்பனையானது. விவசாயிகளிடம் சின்ன வெங்காயத்தை ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகமாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. 
தற்போது ஒரு கிலோ  ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
கவலை அளிக்கிறது 
சில விவசாயிகள் சரக்கு வாகனங்களில் வெங்காயத்தை எடுத்துச்சென்று நேரடியாக விற்பனை செய்து நஷ்டத்தை ஈடு கட்ட முயற்சி செய்தாலும், பெட்ரோல், டீசல், செலவால் அந்த முயற்சியும் பலன் தரவில்லை. சராசரியாக ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. 
இந்த நிலையில் இந்த விலை சரிவு விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது கவலை அளிக்கிறது." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story