கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிவகங்கையில் நடந்த கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிவகங்கை,
சிவகங்கையில் நடந்த கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வெட்டிக்கொலை
சிவகங்கை ராமசாமி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிவகங்கையை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25), புலி கார்த்திக் (26), மைக்கேல் (27), வெற்றிவேல் (25), கார்த்திக் ராஜா (26) உள்பட 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.
இவர்கள் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை மதுரை சிறையில் இருக்கும் சக்திவேலிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story