பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 24 April 2022 11:39 PM IST (Updated: 24 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் கணேஷ்நகரில் உள்ள பூமாயியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணேஷ்நகர் மைதானத்தில் கூடிய பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பெண்கள் பூத்தட்டுகளையும் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


Next Story