கரிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்


கரிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 11:43 PM IST (Updated: 24 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

கரிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வீராமுத்தூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் தனிமனித சுத்தம் மற்றும் கிராம தூய்மையை பின்பற்றி நோயற்ற கிராமமாக மாற்ற வேண்டும், குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தத் வேண்டும், நீர் நிறைந்த கிராமமாக்க நீர்நிலைகள் தூர்வாரி மழை காலங்களில் மழை நீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சிக்குட்பட்ட 650 பேருக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Next Story