பெரும்பச்சேரியில் கிராம சபை கூட்டத்தில் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம்
பெரும்பச்சேரியில் கிராம சபை கூட்டத்தில் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இளையான்குடி,
பெரும்பச்சேரியில் கிராம சபை கூட்டத்தில் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
55 ஊராட்சிகளில்
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி மன்ற கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. தடியமங்கலம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துறை அலுவலர் யுவராணி முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் வாழ்த்துரை வழங்கினார். ஊராட்சி செயலர் சரவணன் முதல்வரின் வாழ்த்துரை மற்றும் திட்டங்களை விளக்கினார்.
இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மலைமேகு, வீ. சேகர், கண்ணன், அழகேசன், வினோத் மற்றும் கிளை நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம்
பெரும்பச்சேரி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக பார் வசதியுடன் இயங்கும் அரசு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.மெய்யனேந்தல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தாமதமாகவும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தாலும் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. உறுப்பினர்களே கூட்டத்திற்கு வரவில்லை கூட்டம் நடைபெறும் இடம் முன்னறிவிப்பு செய்யவில்லை விவசாயிகளுக்கான கிசான் கார்டு வழங்குவது சம்பந்தமாக வேளாண்துறை அதிகாரிகள் வரவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை கிராமத்தினர் எழுப்பினர்.
Related Tags :
Next Story