கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினம்
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
கரூர்,
உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் நல்நூலகர் சுகன்யா வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டையை வழங்கினார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்புரையாற்றினார். உலக புத்தக தினத்தை முன்னிட்டு 1000 பள்ளி மாணவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்தனர். முடிவில் மாவட்ட மைய நூலகத்தின் 3-ம் நிலை நூலகர் இளையசபரி நன்றி கூறினார்.
இதேபோல் இனாம் கரூர் கிளை நூலகத்தில் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 65 ேபர் தங்களை நூலகத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியை பேபி ராணி நூலகத்தின் பயன்கள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார். முடிவில் நூலக பணியாளர் ரேவதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story