தி.மு.க. பொதுத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி
தி.மு.க. பொதுத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்,
தி.மு.க. பொதுத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கட்சி பொதுத் தேர்தல்
விருதுநகர் மாவட்டத்தில் பேரூர் மற்றும் நகர்பகுதி வார்டு நிர்வாகிகளுக்கான விருப்பமனு வினியோகம் நேற்று தொடங்கியது. இந்நகர் வி.வி.எஸ். திருமண அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆணையாளர் சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுடன் பயணம் செய்த உங்களில் யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் நீங்களும் நாங்கள் இழக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அடுத்து இரண்டு நாட்களுக்குள் அனைவரும் அமர்ந்து பேசி அனைத்து வார்டுகளுக்கும் தலைமை கழக ஆணையரிடம் விருப்ப மனுக்களை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் 28-ந் தேதி க்குள் தேர்தலை முடித்தாக வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுப்பினர் அட்டை
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், 15-வது பொதுத் தேர்தல் விதிமுறைகளை தலைமை கழக ஆணையாளர் சீனிவாசன் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதன்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் தங்களிடம் இருக்கும் உறுப்பினர் அட்டையை சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சென்று சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதில் யாராக இருந்தாலும் இந்த பணியை செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் அப்பகுதியில் தேர்தல் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன், சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story