கிராம சபை கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கிராம சபை கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2022 12:06 AM IST (Updated: 25 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
மயங்கி விழுந்த பெண் 
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமசபை கூட்டத்தில் மேட்டமலை, வீரபாண்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவரை முற்றுகையிட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
கடந்த 2 ஆண்டுகளாக கிராமத்தில் எந்தவித வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறினர். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கு கூட்டத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தார். இந்த நிலையில் கூட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அதேபோல  45 பஞ்சாயத்துக்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
மகாராஜபுரம் 
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி ராமுத்தாய் முன்னிலையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மகாராஜபுரம் ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றம் சாட்டினர். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில் வேளாண்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story