ஆட்டோ திருடிய 2 பேர் கைது


ஆட்டோ திருடிய 2 பேர் கைது
x

கபிஸ்தலம் அருகே ஆட்டோ திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் அருகே ஆட்டோ திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ திருட்டு

கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை தெற்கு தெருவில் வசிப்பவர் சக்கரவர்த்தி மகன் சதீஷ் (வயது32). இவர் கடந்த 18-ந் தேதி புதிதாக பயணிகள் ஆட்டோ ஒன்றை கும்பகோணத்தில் இருந்து வாங்கி வந்து தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். 
இரவு வீட்டில் தூங்கி விட்டு காலையில் காலை எழுந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த புதிய ஆட்டோவை காணவில்லை. மர்மநபர்ககள் அதை திருடிச்சென்றது தெரியவந்தது. 

2 பேர் கைது

இதுதொடர்பாக சதீஷ் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சட் செல்வகுமார், ஏட்டு கபிலன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் ஸ்ரீராம் (19), உள்ளிக்கடை நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சஞ்சய் (19) ஆகியோர் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. மேலும் ஆட்டோவை இளங்கார்குடி கிராமத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை மீட்ட போலீசார் ஸ்ரீராம், சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story