கிராமத்தை நோக்கி காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிராமத்தை நோக்கி காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டியில் கிராமத்தை நோக்கி காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராஜலிங்கம் சேவகர், துணைத்தலைவர் வைரப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து ெகாண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது அச்சமின்றி காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் அதன் அவசியம் பற்றியும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பற்றியும், பள்ளி செல்லும் சிறுவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story