அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்


அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 12:16 AM IST (Updated: 25 April 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே வையங்குடியில் சாலை, குடிநீர்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் தயாபேரின்பம் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களது வீடுகளில் கரும்பு கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story