கல்குறிச்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
காரியாபட்டி அருகே கல்குறிச்சி கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கல்குறிச்சி கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசியதாவது:- தி.மு.க. ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் மதிப்பில் கல்குறிச்சி சமத்துவபுரம் மராமத்து செய்யப்படவுள்ளது. இந்த சமத்துவபுரத்தில் ரூ. 3 லட்சம் செலவில் பெரியார் சிலை அமைக்கப்படவுள்ளது. மேலும் கல்குறிச்சியில் உள்ள தெருக்களில் ரூ. 1 கோடி செலவில் பேவர்பிளாக் சாலை, குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ்த்தேவர், கு.கண்ணன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் இசலிரமேஷ், வேளானேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story