தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
வேலூர் பாகாயம் வானவில்நகர் பகுதியில் லிட்டீய வைரமுத்துதெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கிதுர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.ரமேஷ்பாபு, பாகாயம்.
வடிகால் வசதி தேவை
வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகே மேம்பாலம் உள்ளது. லேசான சாரல் மழை பெய்தாலும் மேம்பாலத்தின் கீழே செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சரியான வடிகால் வசதி செய்து மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி உள்ளது. அங்கு தினமும் ஆற்காடு, முத்துக்கடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் இருந்து மாணவிகள் படிக்க வருகின்றனர். கல்லூரிக்கு செல்ல காலை நேரத்திலும், கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல மாலை நேரத்திலும் போதிய பஸ் வசதி இல்லை. மகளிருக்கான கட்டணமில்லா பஸ்சும் உரிய நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செஞ்சுலட்சுமி, ஆற்காடு.
ஆபத்தான நிலையில் மின் கம்பிகள்
வேலூர் அருகே சதுப்பேரியில் உள்ள ஆபீசர் லைன் தெருவில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. கைக்கு எட்டும் நிலையில் உள்ள மின்சார கம்பிகள் முள் செடிகள் மீது தொங்கிய படி உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதேவி, சதுப்பேரி.
புகையால் மூச்சுத்திணறல்
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் துத்திக்காடு கிராமத்தின் வழியாக ஓடும் கால்வாயில் குப்பைகள், கோழிக்கழிவுகள் ஆகியவற்றை எடுத்து வந்து கொட்டிச் ெசல்கின்றனர். சிலர் அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து ெவளியேறும் நச்சுப்புகையால் அங்குள்ள மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்.
-த.அரவிந்தன், கணியம்பாடி.
கிணற்றை தூர்வார ேவண்டும்
வேலூர் மாவட்டம் கீழ்மொணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்நகர் கிராமத்தில் பொதுக்கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கிணறு தூர்ந்துபோய் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ந.நவின்ராஜ், பெருமாள்நகர்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட மோசூர் கிராமத்தில் ரெயில் நிலையம் மற்றும் நீர் நிலையைச் சுற்றிலும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மோசூர் ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.
-குமார், மோசூர்.
மின்கம்பத்தில் படர்ந்த கொடிகள்
வேலூர் அருகே சதுப்பேரி ஏரியில் தண்ணீர் கோடி போகும் இடத்தின் அருகே திடக்கழிவு மேலாண்மை கட்டித்தின் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளன. இதனை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், சதுப்பேரி.
Related Tags :
Next Story