கோவில் தேரை இழுத்து சென்றதை தடுத்து தகராறு செய்தவர் கைது
திருஉத்தரகோசமங்கையில் கோவில் தேைர இழுத்து சென்றதை தடுத்து தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
திருஉத்தரகோசமங்கையில் 150 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தேர் செய்து தேரோட்டம் நடந்துள்ளது. இந்நிலையில் விழா முடிவடைந்ததால் மராமத்து செய்து நிலைநிறுத்தி வைக்க நேற்று முன்தினம் தேரை இழுத்து சென்றனர். அப்போது அங்கு வந்த வெள்ளா கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெகநாதன் (வயது 38) என்பவர் வழிமறித்து தேரை இழுத்து செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் கொன்றுவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தாராம்.இதுகுறித்து கோவில் சரக பொறுப்பாளர் சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story