அரசு பள்ளி மாணவியர் விடுதியில் தாசில்தார் ஆய்வு
தொண்டியில் அரசு பள்ளி மாணவியர் விடுதியில் தாசில்தார் ஆய்வு நடத்தினார்.
தொண்டி,
தொண்டியில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதியில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த விடுதியில் பல்வேறு குறைபாடுகளை அவர் கண்டறிந்தார். அதனை தொடர்ந்து அந்த விடுதியின் பாதுகாப்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் அலுவலர்களை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி மாணவியர் விடுதியை திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கியிருந்த மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.மேலும் மாணவர்களின் எண்ணிக்கை, வருகை பதிவு மற்றும் உணவு பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story