கண்மாயில் மூழ்கி மூதாட்டி சாவு
பூவந்தி அருகே கண்மாயில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பா (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை மணல்மேடு அருகே உள்ள பட்டனேந்தல் கண்மாயில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவருடைய மகன் தனுஷ்கோடி கண்மாய், அக்கம்-பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து இருந்துவிட்டாராம்.
இந்த நிலையில் நேற்று காலை கண்மாய்க்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் கண்மாயில் பெண் பிணம் ஒன்று மிதப்பதை கண்டு கிராம மக்களுக்கு தகவல் கூறி உள்ளனர். இது பற்றி அறிந்த தனுஷ்கோடி, கண்மாய் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் கண்மாயில் மிதந்து கிடந்தது தனது தாய் என்பதை அறிந்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு பிணத்தை கைப்பற்றியும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story