உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால் அபிஷேகம்


உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால் அபிஷேகம்
x
தினத்தந்தி 25 April 2022 1:10 AM IST (Updated: 25 April 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர்:-

கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரத்தில் அங்கவள நாயகி சமேத உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. நடராஜர் தலமான இங்கு சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நேற்று நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. முன்னதாக செல்லப்பா சிவாச்சாரியார் தலைமையில் கடம் பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சதாசிவ குருக்கள் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் பங்கேற்று 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் நடராஜருக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story