‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 April 2022 1:13 AM IST (Updated: 25 April 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாகும் குடிநீர்

பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ்நிறுத்தம் அருகாமையில்  தனியார் வங்கி அருகே குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குழாயில் திறப்பான் இல்லை.  இதனால் தண்ணீர் வரும் நேரங்களில்  குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் .குடிநீர் தேங்கி கழிவு நீர் போல் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர்குழாயில் திறப்பான் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

Next Story