மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராயர். இவருக்கு ராஜேஸ்வரி, விஜயா என்ற 2 மனைவிகள் இருந்தனர். ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். விஜயாவின் மகன் விஷ்ணு பாரதி (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை விஷ்ணு பாரதி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்றார். அங்கு மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணு பாரதியை மீட்டு சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து சென்று அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story