தொழிலாளி வீட்டில் யு.பி.எஸ். வெடித்தது
எடப்பாடி அருகே தொழிலாளி வீட்டில் யு.பி.எஸ். வெடித்ததில் நகை, பணம் தீயில்கருகின.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே தொழிலாளி வீட்டில் யு.பி.எஸ். வெடித்ததில் நகை, பணம் தீயில்கருகின.
யு.பி.எஸ். வெடித்தது
எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தை அடுத்த எருமைப்பட்டி மட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது (வயது 54). நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக யு.பி.எஸ். வாங்கியுள்ளார். இந்த யு.பி.எஸ். நேற்று அதிகாலை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் தீப்பற்றி எரிந்தது. மாது தனது குடும்பத்தினருடன் மற்றொரு அறையில் தூங்கியதால், அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
15 பவுன் நகைகள்
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.55 ஆயிரம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணி மணிகள் தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி அருகே யு.பி.எஸ். வெடித்து வீட்டில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story