ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 25 April 2022 1:42 AM IST (Updated: 25 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

எடப்பாடி:-
கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 700 முதல் ரூ.12 ஆயிரத்து 950 வரையும், டி.சி.எச். பருத்தி ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 500 முதல் ரூ.13 ஆயிரத்து 350 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது.

Next Story