மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 2:14 AM IST (Updated: 25 April 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமிர்தகனி (வயது 50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று கணேசன் தனது வீட்டில் திடீரென்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story