கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும்; பெருந்துறையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும்; பெருந்துறையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2022 2:18 AM IST (Updated: 25 April 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பெருந்துறையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்துறை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பெருந்துறையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கான்கிரீட் தளம் 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடத்திய கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள், கீழ்பவானி வாய்க்காலில் எந்தவொரு பகுதியிலும் கான்கிரீட் போடக்கூடாது என்பதை முன்னிறுத்தி பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* கீழ்பவானி பிரதான மற்றும் கிளை வாய்க்கால்களில் கான்கிரீட் சுவர்- தளம் அமைக்கும் பணியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
* கால்வாயில் கடைமடை வரை நீர் தடையின்றி செல்ல போர்க்கால அடிப்படையில், கால்வாய்களில் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கடந்த 50 ஆண்டுகளில், கீழ்பவானி வாய்க்கால் செல்லும் பாசனப்பகுதிகளில், 25 ஆயிரம் ஏக்கர் பாசனநிலங்கள் கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன. இதனால் மீதமாகும் தண்ணீரை முறைப்படுத்தினால், கடைமடை விவசாயிகளுக்கும் போதுமான நீர் கிடைக்கும்.
தேவையில்லை
* கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீரை நம்பி 300 வருவாய் கிராமங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து வருகிறது. மாறாக, கால்வாயில் கான்கிரீட் தளம்- சுவர் அமைத்தால், இந்த கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது உறுதி.
* மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணையும், இருபுறமும் மண்ணால் ஆன கரையும் கொண்ட பிரதான கால்வாயும், கிளை கால்வாய்களும் இன்றளவும் தரத்துடனும், பலத்துடனும் இயங்கி        வருகின்றன. எனவே, விவசாயிகளின் பாசனத்தை பாதிக்கும் கான்கிரீட் அமைப்பு தேவையில்லை.
மேற்கண்டவை உள்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story