தக்கலை அருகே மாயமான மூதாட்டி தோட்டத்தில் பிணமாக மீட்பு


தக்கலை அருகே மாயமான மூதாட்டி தோட்டத்தில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 25 April 2022 2:59 AM IST (Updated: 25 April 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மாயமான மூதாட்டி தோட்டத்தில் பிணமாக மீட்பு

பத்மநாபபுரம், 
தக்கலை அருகே உள்ள தெங்கன்குழி ஆலன்விளையை சேர்ந்தவர் கொச்சப்பன்பிள்ளை. இவருடைய மனைவி சரஸ்வதி அம்மாள் (வயது 82). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் இறந்து விட்டதாலும், பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும் சரஸ்வதி அம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சரஸ்வதி அம்மாள் திடீரென மாயமானார். இதனால், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அன்னாசி பழத்தோட்டத்துக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது, தோட்டத்துக்குள் சரஸ்வதி அம்மாள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி அம்மாளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி அம்மாள் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story