அஞ்சுகிராமம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


அஞ்சுகிராமம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 3:08 AM IST (Updated: 25 April 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

அஞ்சுகிராமம், 
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சூசை ஜார்ஜ் (வயது33), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2½ வயதில் ஒரு மகனும் உள்ளனர். சூசை ஜார்ஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என தெரிகிறது. இதனால், கணவன்-மனைவி இடைேய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவி மகனுடன், சூசை ஜார்ஜை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனவேதனை அடைந்த சூசை ஜார்ஜ் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story