மங்களூரு விமான நிலையத்தில் ரூ.10¼ லட்சம் தங்கம் பறிமுதல்


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.10¼ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 April 2022 3:10 AM IST (Updated: 25 April 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.10¼ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு:

மங்களூரு விமான நிலையம்

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.

  அதனை தீவிர சோதனை மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.10¼ லட்சம் தங்கம் பறிமுதல்

  அந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து மங்களூருவிற்கு விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகள், அவரது உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். 

அப்போது பையில் மறைத்து வைத்து 192 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல செய்தனர். அதன் மதிப்பு ரூ.10¼ லட்சம் ஆகும். இதையடுத்து பெண், பஜ்பே போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

  அதன்பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story