“தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது” டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


“தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது” டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
x
தினத்தந்தி 25 April 2022 3:33 AM IST (Updated: 25 April 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

“தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது” என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்

நெல்லை:
“தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது” என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
டி.ஜி.பி. சைேலந்திரபாபு ஆறுதல்
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா கத்திக்குத்தில் காயம் அடைந்து நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
மேலும் அவருக்கு ஆறுதல் கூறி, கத்தியால் குத்தியவரை எதிர்கொண்டு சமாளித்ததுடன், அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
போலீசாருக்கு வெகுமதி
இதுதவிர கத்திக்குத்து சம்பவம் நடந்தபோது, சப்-இன்ஸ்பெக்டருடன் பணியில் இருந்து கத்தியால் குத்திய ஆறுமுகத்தை மடக்கிப்பிடித்த போலீசார் லட்சுமி, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சுத்தமல்லி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தனது பணியை சரியாக செய்து உள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் மதுபோதையில் சென்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார். இந்த நிலையில் மார்க்ரெட் தெரசா, கோவில் கொடை விழா பாதுகாப்பு பணிக்கு சென்றபோது, ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார். அப்போது, மார்க்ரெட் தெரசா திறம்பட செயல்பட்டு, தன்னை காத்துக் கொண்டதுடன், ஆறுமுகத்தையும் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். கத்தியால் குத்திய ஆறுமுகத்தின் கை முறிந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றங்கள் குறைந்துள்ளது
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் நடைபெறும் பழிக்குப்பழி வாங்கும் கொலைகளும் குறைந்து உள்ளது. கஞ்சா, புகையிலை மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்து உள்ளது. அதற்கு அத்தகைய வழக்குகளை போலீசார் அதிகம்
பதிவு செய்வதே காரணம். 
போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்து, நல்லுறவை பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து போலீஸ் நிலையங்கள் முன் வரவேற்பு அதிகாரியை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவர் பொதுமக்களை வரவேற்று குறைகளை கேட்கும் வகையில் செயல்படுவார். மேலும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க வாரந்தோறும் யோகா, உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை அவசர தேவை இல்லாத காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story