விஷம் கலந்த உணவை கொடுத்து 9 தெருநாய்களை கொன்ற மர்மநபர்கள்
பெங்களூருவில் விஷம் கலந்த உணவை கொடுத்து 9 தெருநாய்களை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராயசந்திரா பகுதியில் ஆங்காங்கே தெரு நாய்கள் செத்து கிடந்தது. ஒரு நாய் மட்டும் உயிருக்கு போராடியபடி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் அந்த நாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அது பெண் நாயாகும். ஒட்டு மொத்தமாக 9 நாய்கள் செத்து கிடந்தது. அந்த தெருநாய்கள் அப்பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சுற்றித்திரிந்ததுடன், இரவு நேரங்களில் குரைத்து வந்ததாக தெரிகிறது. தெருநாய்களின் தொல்லை காரணமாக மர்மநபர்கள் உணவில் வைத்து கொன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story