தேசிய குடிமை பணிகள் தினவிழா


தேசிய குடிமை பணிகள் தினவிழா
x
தினத்தந்தி 25 April 2022 4:09 AM IST (Updated: 25 April 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குடிமை பணிகள் தினவிழா கொண்டாடப்பட்டது

நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடிமை பணிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். அகடாமிக் இயக்குனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்திய குடிமை பணிகள், அதன் பிரிவுகள், யு.பி.எஸ்.சி. தேர்வுகள், அதற்கான தகுதி மற்றும் பயிற்சி முறைகள் பற்றிய தகவல்களை ஆசிரியைகள் அன்பு ஸ்டெல்லா, அமிதா ஆகியோர் கூறினர். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வெவ்வேறு இந்திய குடிமை பணிகளுக்கான சின்னங்களை வரைவதற்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. மேலும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சாதனைகளை மாணவர்கள் காணொலி காட்சி மூலம் விளக்கினர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

Next Story