கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
கொள்ளிடம் டோல்கேட்:
குளித்தபோது மூழ்கினார்
திருச்சி புலிவலம் அருகே உள்ள மூவானூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் விஜயகுமார்(வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வாத்தலை அருகே தெற்கு சித்தாம்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர் வந்தார். பின்னர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக 2 சிறுவர்களுடன் சென்றார். அங்கு விஜயகுமார் கிணற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக்கண்ட சிறுவர்கள் சத்தம் போட்டனர். இதனையறிந்த கிராம மக்கள் இது பற்றி முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி, விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
சலசலப்பு
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், போலீசார் 2 மணி நேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. போலீசார் வரும்வரை விஜயகுமாரின் உடல் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story