குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை


குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 4:15 AM IST (Updated: 25 April 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சோமரசம்பேட்டை:

தொழிலாளி
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா, மகன் பார்த்தசாரதி(19). பார்த்தசாரதி பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். ரெங்கராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மல்லிகாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் வழக்கம்போல் மல்லிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட பார்த்தசாரதி, ஏன் இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் அவரை ரெங்கராஜ் திட்டியுள்ளார்.
அரிவாளால் வெட்டினார்
இதில் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ரெங்கராஜை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ரெங்கராஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரெங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story