பள்ளி வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்
பள்ளி வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி:
வகுப்பறையில் மாணவர்கள் அத்துமீறல்
தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் முன்னிலையிலேயே ஒரு சில மாணவர்கள் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடுவது, ஆசிரியரை தாக்க முயற்சிப்பது, அத்துமீறி நடந்து கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை
பள்ளிக்கல்வித்துறையும், பள்ளி பாதுகாப்பு இயக்கமும் சேர்ந்து 1,000 இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போல் ஆரம்பிக்கும் நல்ல முயற்சியை தொடங்கி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு இதனை தொடங்கி வைத்துள்ளார். இதை முன்னோடி திட்டமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் செய்முறை தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்பாக, இதில் உள்ள சாதக, பாதகங்களை பார்க்க வேண்டும். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் கவுன்சிலிங் கொடுத்து, அவர்களை எப்படி மேம்படுத்த வேண்டும்? என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறோம். மிக விரைவில் இந்த பணியை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story