மாவட்ட மைய நூலகத்தில் 2-ம் சுற்று புத்தக திறனாய்வு போட்டி
மாவட்ட மைய நூலகத்தில் 2-ம் சுற்று புத்தக திறனாய்வு போட்டி நாளை நடக்கிறது.
திருச்சி:
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கடந்த 23-ந் தேதி உலக புத்தக தினத்தன்று மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு புத்தக திறனாய்வு போட்டி நடத்தப்பட்டது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், வாசகர்களுக்கு ஒரு பிரிவாகவும நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாங்கள் படித்த ஒரு புத்தகத்தை பற்றி அவர்கள் திறனாய்வு செய்தனர். ஒரு போட்டியாளருக்கு 10 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் சுற்றில் வாசகர் பிரிவில் முதல் 5 இடங்களை பெற்றவர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் சுற்று போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும் மற்றும் புத்தகப்பிரியர் என்ற விருதும் வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story