சிறப்பு கிராம சபை கூட்டம்
சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
தென்காசி:
அடையக்கருங்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார துணை மண்டல மேலாளர் சத்தியவாணிமுத்து முன்னிலை வகித்தார். ஊராட்சி எழுத்தர் சுரேகா தீர்மானங்களை வாசித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், தோட்டக்கலை துறை பார்த்திபன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி துணை தலைவர் மதன கிருஷ்ணன் நன்றி கூறினார்.
ராதாபுரம் ஊராட்சி பண்ணையார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு, பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி தலைமை தாங்கினார். துணை தலைவர் சபாபதி பலவேசம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு கடையம் பஞ்சாயத்தில் தலைவர் முத்துலட்சுமி ராமதுரை தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் மகாலிங்கம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செண்பகம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாயத்து செயலாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
ரவணசமுத்திரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைவர் முகம்மது உசேன் தலைமை தாங்கினார். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குளோரி முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் மணிகன்டன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலட்சுமி, வேளாண்மை துறை அதிகாரி ஜெகன், ஊர் தலைவர் பரமசிவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story