காருகுறிச்சி அருணாசலத்தின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவி
காருகுறிச்சி அருணாசலத்தின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவி
நெல்லை:
நாதசுவர கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜ நகரை சேர்ந்த டாக்டர் சிவனு பாண்டியன்- கிருஷ்ணவேணி தம்பதி மகள் பிளஸ்-1 மாணவி பிரஷ்தா, நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று காருகுறிச்சி அருணாசலத்தின் பிரமாண்ட ஓவியத்தை கதர் துணியில் வரைந்து அசத்தினார். 25 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட துணியில் காருகுறிச்சி அருணாசலம் நாதசுவரம் இசைப்பது போன்று தத்ரூபமாக வரைந்தார். அப்போது காருகுறிச்சி அருணாசலத்தின் மங்கள இசை ஒலிக்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, ஓவியர் கணேசன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. நிர்வாகிகள் மூளிகுளம் பிரபு, மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவி பிரஷ்தா கூறுகையில், ‘‘காருகுறிச்சி அருணாசலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஓவிய ஆசிரியர் கணேசன் ஆலோசனைப்படி இந்த ஓவியத்தை வரைந்தேன். இதற்காக கடந்த 1 மாதமாக பயிற்சி எடுத்தேன்’’ என்றார்.
Related Tags :
Next Story