சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக சிறுமிகளை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
சமூக வலைதளம் மூலம் பழகிய 2 கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னை கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைதானார்.
ஆபாச புகைப்படங்கள்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதான 2 சிறுமிகளிடம் சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் (வயது 19) என்பவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளம் மூலம் பழகி வந்தார். அப்போது சிறுமிகளிடமிருந்து அவர்களின் ஆபாச புகைப்படங்களை பெற்றுக்கொண்டார்.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிகள், வேறு சிலரிடம் பேசி வந்ததாகவும், இதனால் மார்க் டி குரூஸ், சிறுமிகளிடம் என்னை தவிர வேறு யாருடனும் நீ்்ங்கள் பேசவோ, பழகவோ கூடாது எனவும், மீறினால் உங்கள் இவருவரின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் சிறுமிகளை மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமிகள், இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள், கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் அவர்கள், அந்த புகார் மனுவை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
கல்லூரி மாணவர் கைது
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பின்னர் பரங்கிமலை மாங்காளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மார்க் டி குரூசை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story