டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 6:47 PM IST (Updated: 25 April 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைத்தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் பால்சிங், பொருளாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குடோன் பணியாளர்களை கடையில் பணி அமர்த்த வேண்டும், உதவியாளர், பதிவுரு எழுத்தர், ஓட்டுனர் பணிக்கு செல்ல விரும்பும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பணி நிரவல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் சேது, பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் சித்திரவேல், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முத்துகுமார், உதவித்தலைவர்கள் லோகநாதன், ஆண்டியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story