மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் அடைய அரசின் நலத்திட்டங்கள் உதவும்- கலெக்டர்
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் அடைய அரசின் நலத்திட்டங்கள் உதவும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:-
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் அடைய அரசின் நலத்திட்டங்கள் உதவும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
மதிப்பீட்டு முகாம்
திருவாரூர் ஆர்.சி. பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் அடைய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் உதவும். மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, கை, கால் செயற்கை அவயங்களுக்கான காலிப்பர்கள், கல்வி உதவித்தொகை போன்ற எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த உதவிகளை மாற்றுதிறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள், மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டி- நன்னிலம்
இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொரடாச்சேரி ஒன்றியத்திலும், நாளை (புதன்கிழமை) வலங்கைமான் ஒன்றியத்திலும், 28-ந் தேதி மன்னார்குடி ஒன்றியத்திலும், 29-ந் தேதி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலும், 30-ந் தேதி நன்னிலம் ஒன்றியத்திலும், 2-ந் தேதி நீடாமங்கலம் ஒன்றியத்திலும், 4-ந் தேதி குடவாசல் ஒன்றியத்திலும், 5-ந் தேதி கோட்டூர் ஒன்றியத்திலும், 6-ந் தேதி முத்துப்பேட்டை ஒன்றியத்திலும் நடக்கிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story