சந்தனக்கட்டைகளை பதுக்கிய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

உப்பிலியபுரம், ஏப்.26-
திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவின் பேரில் துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் வனத்துறையினர் உப்பிலியபுரம் அருகே டி.பாதர்பேட்டை பகுதியில் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் வெங்கடேசன் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு சாக்கு மூட்டைகளில் 22 கிலோ சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், சமீபத்தில் நாமக்கல் மாவட்ட வருவாய் துறையினர் டி.பாதர்பேட்டையை அடுத்த அடுக்கம் கோம்பை பகுதியில் போலி சாமியாரின் இடங்களுக்கு `சீல்' வைத்தனர். அதற்கு முன்னதாகவே அந்த சாமியார் மட மேலாளர் மணிகண்டன் (43) பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய சந்தனக்கட்டைகளை இங்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்து வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய இருவருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்கள் அபராதம் செலுத்தியதும் இருவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக்கட்டைகளை வனத்துறை கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story