பாண்டமங்கலம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
பாண்டமங்கலம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூர் பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் நின்ற மோட்டார் சைக்கிள் மீது சசிகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் சசிகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சசிகுமார் இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story