காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா ஜூலை 10 ந்தேதி தொடங்குகிறது


காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா  ஜூலை 10 ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 April 2022 7:54 PM IST (Updated: 25 April 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா ஜூலை 10-ந்தேதி தொடங்குகிறது.

காரைக்கால்
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா ஜூலை 10-ந்தேதி தொடங்குகிறது.

காரைக்கால் அம்மையார்

இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் கோவில் உள்ளே எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாங்கனித்திருவிழா

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு வழக்கம் போல் மாங்கனித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் கோவில் உள்ளேயே நடைபெற்றது.
தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்ததால் இந்தாண்டு வழக்கம் போல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், ஜூலை 10-ந் தேதி முதல் 14-தேதி வரை வெளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

2019-ம் ஆண்டு திருவிழாவில் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர அறங்காவல் வாரியம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார் விழா நடைபெறும் நாட்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.


Next Story