சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை


சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 April 2022 8:09 PM IST (Updated: 25 April 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

ஊட்டி

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். 

அப்போது ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து குடிநீர், வீட்டுமனை, சாலை வசதி கேட்டு மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சாலை வரி

நீலகிரி சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் உரிைமயாளர்கள் சங்கம் சார்பில் வழங்கிய மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரியில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்குகிறது. இதற்கான அனுமதி சான்று, சாலை வரி, காப்பீட்டு ெதாகை ஆகியவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை செலுத்தி வருகிறோம்.

 கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ே்டாம். தற்போது கொரோனா குறைந்ததால், சுற்றுலா வாகன தொழில் இயல்புக்கு திரும்பி வருகிறது. 

கடும் நடவடிக்கை

ஆனால் செல்போன் செயலி மூலம் புக்கிங் எடுத்து, கார்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் நீலகிரியில் தொழிலை தொடங்கி உள்ளன. இதனால் எங்களுக்கு சவாரி கிடைப்பது இல்லை. 

இது தவிர ஆட்டோக்கள் கூட குறிப்பிட்ட கிலோ மீட்டரை தாண்டி ஊட்டியில் இருந்து பைக்காரா, குன்னூர், முதுமலை, மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை சிலர் வாடகைக்கு விடுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story