பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா, கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் 22 நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 13-வது நாளான இன்று காலை 9 மணிக்கு டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது.
அம்மன் சூலாயுதத்துடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் வழியாக மேள-தாளங்களுடன் ஊர்வலமாக சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோத்தகிரி வட்டார போயர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story