மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 25 April 2022 8:09 PM IST (Updated: 25 April 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கூடலூர்

மசினகுடி அருகே வாழைத்தோட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஊட்டி சிறப்பு தாசில்தார் குமரராஜா தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு சசிகுமார், மசினகுடி இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி, ரேஷன் கார்டு கேட்டு 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள், வருவாய்த்துறையினர், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story