உலக புத்தக தின கண்காட்சி
உலக புத்தக தின கண்காட்சி
கூடலூர்
கூடலூர் கிளை நூலகம் மற்றும் கூடலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக புத்தக தின விழா, நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து புத்தகங்களின் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.
வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் நல்லகுமார், முன்னாள் தலைவர் ராஜநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி திட்ட ஆசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்ட ஆசிரியை நபீதா, கங்கா, ஊராட்சி ஒன்றிய எழுத்தர் சுரேஷ்குமார், நூலக பணியாளர் ரிச்சர்ட் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் கிளமெண்ட் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story