வெட்டாற்றங்கரையில் படித்துறை கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


வெட்டாற்றங்கரையில் படித்துறை கட்டப்படுமா?  கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 April 2022 12:15 AM IST (Updated: 25 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே கண்டியூரில் உள்ள வெட்டாற்றங்கரையில் படித்துறை கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வலங்கைமான்:-

வலங்கைமான் அருகே கண்டியூரில் உள்ள வெட்டாற்றங்கரையில் படித்துறை கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெட்டாறு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கண்டியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வெட்டாற்றங்கரையில் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய தண்ணீர் தேவைக்கு வெட்டாற்றை பயன்படுத்த வேண்டி உள்ளது. 
ஆனால் ஆற்றுக்கு செல்லும் பாதை 50 மீட்டர் தூரத்துக்கு மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆற்றங்கரையில் படித்துறை இல்லை. இதனால் மழை காலங்களில் ஆற்றுக்கு செல்லும் கிராம மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.  

பொதுமக்கள் அச்சம்

படித்துறை இல்லாததால் அதிக அளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றுக்கு செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் கால்நடைகளையும் ஆற்றுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
எனவே இப்பகுதி ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர், படித்துறை கட்ட வேண்டும் என்றும் ஆற்றுக்கு செல்லும் பாதையில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story