மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வங்கிகள் விரைவாக வழங்க வேண்டும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
மகளிர் குழுக்களுக்கு வங்கிகள் கடன் உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
மகளிர் குழுக்களுக்கு வங்கிகள் கடன் உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ரூ.550 கோடி இலக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் நிதிகள் வழங்கப்பட்டு பயனாளிகள் பயன் பெறுகின்றனர். கடந்த நிதியாண்டில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கு ரூ.350 கோடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாமல் பல வங்கிகள் இருந்துள்ளது. நடப்பாண்டில் ரூ.550 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்க காலதாமதம் ஏற்படுவதால் மகளிர் குழுக்கள் தனியார் வங்கிகளை நாடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டியில் வழங்கினால் அனைத்து குழுக்களும் பயன்பெறுவார்கள். வங்கியும் லாபம் அடையும். மகளிரை அலைக் கழிப்பதால் அவர்கள் தனியார் வங்கிகளை நாடுகின்றனர். நடப்பாண்டில் இந்தநிலை முற்றிலும் மாற வேண்டும். மகளிர் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் உதவிகளை விரைந்து வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிலுவை
மேலும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்குவதில் உள்ள நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும். தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க நிறுவனம், பிற்படுத்தப்பட்டோர் துறை, வேளாண்மைத் துறை என பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவி வழங்கும் நிலைகளை விரைவாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், முழுமையாக கடன் உதவிகளை வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜன், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story