வெள்ளானூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடையே கலந்துரையாடினார்.
முடிவில் அனைவரும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story